டாடா டெலிசர்வீசஸை கையகப்படுத்தும் ஏர்டெல் நிறுவனம்

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.

தொலைதொடர்புத் துறையில் நிலவும் போட்டியை சமாளிக்க முடியாமல் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் கடனில் சிக்கித் தவிக்கிறது. இதனால் அந்த நிறுவனத்தை இணைக்க ஏர்டெல் முடிவு செய்து, அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. ”ரொக்கம் இல்லா – கடன் இல்லா” நடைமுறையின் கீழ் இணைப்பானது நடைபெறவுள்ளது.

இணைப்புக்குப் பின்னர் டாடாவின் 4 கோடி வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் அனைவரும் ஏர்டெல் நிறுவனத்தை சார்ந்தே இருப்பார்கள். இணைப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள டாடா குழும தலைவர் சந்திரசேகரன், ஒப்பந்தம் சிறப்பானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன