ஜெர்மனியில் 184-ஆவது அக்டோபர் திருவிழா தொடக்கம்

ஜெர்மனியின் மூனிக் (Munich) நகரில் 184 ஆவது அக்டோபர் திருவிழா தொடங்கியுள்ளது.

18 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க நாளில் பாரம்பரிய முறையிலான குதிரை வண்டி அணிவகுப்பும் வாத்திய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழா மைதானத்தில் குழந்தைகள் விளையாடும் கேளிக்கை விளையாட்டுக்களும், பிரம்மாண்ட ராட்டிணங்களும், ஏராளமான உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் திருவிழாவின் ஓர் அங்கமான உலகின் மிகப்பெரிய பீர் திருவிழாவை மூனிக் மேயர் தொடங்கிவைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன