Advertisement
Advertisement

ஜெர்மனியில் வானில் பறந்த மர்மப்பொருள் – பறக்கும் தட்டா? விண்கல்லா? என்று ஆய்வு

ஜெர்மனியில் நள்ளிரவில் வானில் கடந்து சென்ற மர்மப் பொருள் என்ன என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஹோச்சன் ((Hoechen)) என்ற நகரத்தில் இரவு நேரத்தில் திடீரென வானில் பிரகாசமான ஒளியுடன் மர்மப்பொருள் ஒன்று கடந்து சென்றது. இது பறக்கும் தட்டாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் அவை விண்கற்களாக இருக்கலாம் என்று சர்வதேச விண்கற்கள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் விண்கல் தீப்பற்றி எரிந்தபடியே செல்லும் என்றும், தற்போது காணப்பட்ட பொருள் முதலில் வெள்ளை நிறத்திலிருந்து பின்னர் பச்சை நிறமாக மாறி இறுதியில் ஊதா நிறத்தில் ஒளிர்ந்து கொண்டே மறைந்துள்ளது.

எனவே இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் விண்கற்கள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன