Advertisement

ஜெயலலிதா மரணமடைந்த தேதி குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாக அப்போலோ மருத்துவமனை குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணமடைந்த தேதி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், தமது கருத்து தவறான புரிந்து கொள்ளப்பட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் திவாகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை ஐந்தேகால் மணிக்கே இறந்துவிட்டதாகவும், மருத்துவமனையின் பாதுகாப்பைக் கருதி ஒருநாள் தாமதமாக மரணம் அறிவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்

இதையடுத்து, அப்போலோ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமான நிலையில், அவர் மரணமடைந்த தேதி, நேரம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாக கூறியுள்ளது. மருத்துவ வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையிலேயே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதன்படியே, எதிர்பாராத அவரது மரணம் குறித்து அறிவிக்கப்பட்டதாகவும் அப்போலோ தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களை கொண்டு ஜெயலலிதாவின் உடல்நலத்தை காக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறியுள்ளது. ஆனால், அந்த உண்மைகளை மறைத்து திரித்து கூறினால், அது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை அவமதிப்பது போலாகும் என்றும் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன