ஜூலை 24 முதல் தொழில் செய்த ரசீதுகளை பதிவேற்றலாம் – ஜி.எஸ்.டி தலைவர் நவின்குமார்

வணிகம் சார்ந்த ரசீதுகளை பதிவேற்றம் செய்ய உதவும் வகையில், வரும் 24-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி.என். இணையதளம் தயாராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.என். இணையதளத்தில் ரசீது பதிவேற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் நவின்குமார், வரும் 24-ம் தேதிமுதல் ரசீதுகளை இணையதளத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். அதற்கென உருவாக்கப்பட்ட எக்ஸெல் எனும் மென்பொருள் வடிவிலான பக்கத்தின் மாதிரி ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மாத இறுதியில் நெருக்கடிகளைத் தவிர்க்க நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசீதுகளுடன் தொழில் செய்பவர்கள், தினந்தோறுமோ, அல்லது வாரம் ஒரு முறையோ அவற்றை ஜி.எஸ்.டி.என்.-ல் பதிவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

200 ரூபாய்க்கு மேல் தொகை கொண்ட ரசீதுகள் கையால் நிரப்பப்பட்டிருந்தாலும், ரசீது எண், வாடிக்கையாளரின் பெயர், தேதி, வாடிக்கையாளர் மற்றும் வரி செலுத்துபவரின் ஜி.எஸ்.டி.ஐ.என். பதிவெண், விநியோகிக்கும் இடம், முகவரி, ஹெச்.எஸ்.என். கோட், வரியின் மதிப்பு, தள்ளுபடி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டிக்களின் பங்குகளுடைய விவரங்கள் அதில் நிரப்பப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!