Advertisement

ஜிம்பாப்வேயில் ராணுவப் புரட்சி ஏதும் நடைபெறவில்லை – ராணுவ தளபதி

ஜிம்பாப்வேயில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏதும் நடைபெறவில்லை என அந்நாட்டின் ராணுவம் விளக்கமளித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் அதிபராக (Robert Mugabe) ராபர்ட் முகாபே 1987 முதல் கடந்த 30 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் (HARARE) ஹராரேயின் முக்கிய சாலைகளில் இன்று அதிகாலை முதல் ராணுவ பீரங்கிகள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவிலான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனால், ஜிம்பாப்வே ஆட்சியை ராணுவம் கையகப்படுத்த முயற்சிப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், அரசை ராணுவம் கைப்பற்றும் முயற்சி ஏதும் நடைபெறவில்லை என தொலைக்காட்சியில் தோன்றி ராணுவ தளபதி விளக்கம் அளித்துள்ளார். அதிபரும் குடும்பமும் நலமுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிபரைச் சுற்றியுள்ள குற்றவாளிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன