Advertisement
Advertisement

ஜிம்பாப்வேயின் அடுத்த அதிபர் எம்மர்சன் மனங்கக்வா

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்கவுள்ள எம்மர்சன் மனங்கக்வா ((Emmerson Mnangagwa)) தலைநகர் ஹராரே வந்தடைந்தார்.

முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேயால் ((Mugabe)) பதவிநீக்கம் செய்யப்பட்ட துணை அதிபர் எம்மர்சன் மனங்காக்வா தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனக் கருதி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்.

ராபர்ட் முகாபே தனது மனைவியை அதிபராக்காமல் தடுக்கும் வகையில் தலைநகர் ஹராரேவையும் நாடாளுமன்றத்தையும் ராணுவம் கைப்பற்றியது. ராணுவத்தின் நிர்பந்தத்தின் விளைவாக ராபர்ட் முகாபே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய அதிபராக எம்மர்சன் மனங்கக்வாவை ராணுவம் முன்மொழிந்துள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து அவர் நாடு திரும்பியுள்ளார்.

ஜிம்பாப்வேயின் அடுத்த அதிபராக நாளை பதவியேற்க உள்ள எம்மர்சனை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன