ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கக் கோரும் 162 நிறுவனங்கள் – ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு

ஒருகோடி ரூபாய்கும் மேல் வரிவிலக்கு கோரியுள்ள 162 நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்யுமாறு மத்திய கலால் வரி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி ஜூலை ஒன்றாம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், அதற்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை மாதம் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி 95 ஆயிரம் கோடி ரூபாயில், 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விலக்கு கோரி வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இத்தனை பெரிய தொகைக்கு விலக்கு கோரப்பட்டதால், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விலக்கு கோரிய 162 நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!