Advertisement
Advertisement

ஜார்க்கண்டில் பகலிலும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவு

வரும் 2018-ஆம் ஆண்டு முதல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் விபத்துகளைக் குறைக்க பகல் நேரத்திலும் வாகனங்களில் முகப்பு விளக்குகள் எரிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்டில் விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து சாலைப் பாதுகாப்புக்குழுவுடன் அம்மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பகல் நேரத்திலும் முகப்பு விளக்கு எரிய விட வேண்டும், இரு சக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என பல விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன