ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்டந்தோறும் செப்.19-ல் விளக்க கூட்டம்

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் குறித்து, மாவட்டந்தோறும் வரும் 19-ம் தேதி விளக்கக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், வரும் 21-ம் தேதி நீதிமன்றத்துக்கு வரும்போது, தலைமைச் செயலாளர், கோரிக்கைகளுக்கான பதிலோடு வருமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதாக சுட்டிக்காட்டினர். அதற்கு மறுநாள் மதுரையில் ஜாக்டோ ஜியோ உயர் மட்டக் குழு கூடி நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன