ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

எல்லை வழியாக ஊடுருவி வந்த 2 தீவிரவாதிகள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுட்டுக் கொல்லபட்டனர்.

எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா ((Bandipora)) மாவட்டத்தின் கூரெஸ் ((Gurez))பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து, ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.

மூன்று தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின்போது, எல்லையில் ஊடுருவிய மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அனந்த்நாக் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் மொபைல் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன