ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி – தீவிரவாதிகள் 2 பேர் ராணுவத்தால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் இரண்டுபேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டம் மச்சில் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றுள்ளனர்.

அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் அவர்களை விரட்ட முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடி தலைமறைவான தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன