Advertisement

ஜப்பானை நாளை தாக்குகிறது லேன் புயல்

ஜப்பானில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், சக்தி வாய்ந்த புயல் நாளை அந்நாட்டை தாக்கும் என அஞ்சப்படுகிறது. லேன் என்ற புயல், சக்தி வாய்ந்த 4ஆம் எண் புயலாக மாறி தெற்கு போரோடினோ பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இந்தப் புயல் ஒக்கினவா நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன், கனமழை பெய்யக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் டோக்கியோவை அடைந்தவுடன், புயல் ஒன்றாம் எண்ணாக வலுவிழந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன