Advertisement

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட புறப்பட்ட மக்கள் – சொந்த ஊருக்குச் செல்ல பேருந்துகள் கிடைக்காமல் பல மணி நேரம் தவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்பவர்கள் திரண்டதால் கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.சென்னையில் வசிக்கும் ஏராளமானோர், பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட குடும்பத்துடன் புறப்பட்டு செல்கின்றனர்.

இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. நேற்று மட்டும் 7 சிறப்பு ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கப்பட்டன. வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது . இதையொட்டி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழக ரயில்வேயின் ஏடிஜிபியான சைலேந்திர பாபு கோவையில் பொங்கலை முன்னிட்டு ரயில்வே பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினார். ((துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் கலந்துக் கொண்ட அவர் ))பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பொங்கலை முன்னிட்டு ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

பொங்கலுக்காக வெளியூர்களுக்கு பேருந்தில் செல்லவும் திரளானோர் முண்டியடித்தனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன