சேலம் ரயில் கொள்ளை குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் ரயிலில் 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை விசாரிக்க புதிதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலா20 பேர் கொண்ட இந்த தனிப்படைகளில் சிபிசிஐடியைச் சேர்ந்த 80 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி, சேலத்தில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில், பார்சல் பெட்டிகளின் மேல்புறமாக துளையிட்டு, 5 கோடியே 78 லட்சம் ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்புக் கொடுப்போருக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில் கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், தற்போது 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன