சென்னை ரயில் நிலைய பாதுகாப்புக்கு கூடுதல் ரயில்வே போலீசார் வரவழைப்பு

சென்னை ரயில்வே பாதுகாப்புப் பணிக்காக, பிற மாவட்டங்களிலிருந்து ரயில்வே போலீசார் 100 பேர் வரவழைக்கப்படுகின்றனர். சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும், லட்சக்கணக்கான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த போதிய ரயில்வே போலீசார் இல்லை என தொடர்ந்து புகார் நிலவுகிறது.

போலீசார் பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலை நிலவுவதாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள ரயில்வே போலீசாரை வரவழைக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்தது. இதன்படி தேர்வான 100 ரயில்வே போலீசார், சென்னை வரவழைக்கப்படுகின்றனர். இவர்கள், நாளை முதல் ரயில் நிலையங்களில் ரோந்து, சாதாரண உடையில் கண்காணிப்பு, மின்சார ரயில்களில் பயணித்து பயணிகளுக்கு பாதுகாப்பளிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன