சென்னை புறநகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அகற்றம்

சென்னை புறநகரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

சென்னையின் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, சிட்லபாக்கம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமைத்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அளித்தும், அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். சிட்லபாக்கத்தில் உள்ள பெரிய ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 25 வீடுகள், கடைகள் ஆகியவை அகற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன