Advertisement

சென்னை – தி.நகரில் அப்பல்லோ ஸ்டடி சென்டரில் மத்திய குற்றப்பிரிவினர் சோதனை

டி.என்.பி.எஸ்.சி. குருப் 1 விடைத்தாள் வெளியானதாக கூறப்படும் விவகாரத்தில் சென்னையில் அப்பல்லோ ஸ்டடி சென்டர் என்ற பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

2016-ம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில், தேர்வு முடிந்த பிறகு, சரியான பதில் எழுதிய விடைத்தாள்கள் சேர்க்கப் பட்டதாக புகார்கள் எழுந்தன. சொப்னா என்ற திருநங்கை தொடர்ந்த வழக்கின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் சிவசங்கர், பெருமாள், இடைத்தரகர்கள் குமரேசன், பால்ராஜ், தேர்வர் ராம்குமார் ஆகியோர் கைதாகினர். முறைகேடு நடந்த விதம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கடந்த வாரம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தியாகராய நகர், சி.ஐ.டி. நகரில் உள்ள அப்பல்லோ ஸ்டடி சென்டர் ((appollo)) என்ற பயிற்சி நிறுவனத்தில் மத்திய குற்றப்பிரிவினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனம் இடைத்தரகர்களுடன் சேர்ந்து முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் புகாரின் பேரில்,சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன