சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் இறுதிக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் – தேர்தல் ஆணையம்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் காலியாக உள்ள, ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானது. இந்நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி, சக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிசம்பர் 31-க்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன