சென்னைள் 10 ஆயிரம் ரூபாய்க்கு போலி மருத்துவ சான்று அளிக்கும் மருத்துவமனை

வெளிநாடு செல்பவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு எந்தவித நோயும் இல்லை என்று போலியான மருத்துவ சான்று அளிப்பதாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்வா மெடிக்கேர் என்ற டயக்னாஸ்டிக் சென்டர் என்ற இந்த மருத்துவமனை மீது தான் பணம் வாங்கிக்கொண்டு போலி மருத்துவச்சான்று வழங்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது..!

சென்னை வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்துவருபவர் ஜான் ரெஜி. துபாயில் பணி புரிந்து திரும்பிய இவர் மீண்டும் வேலைக்காக துபாய் செல்ல நெற்குன்றத்தில் உள்ள சூர்யா டிராவல்ஸை அனுகி உள்ளார். அவர்கள், ஜான் ரெஜியிடம் 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு சென்னை தியாகராய நகரில் உள்ள மார்வா மெடிக்கேர் மற்றும் டயக்னாஸ்டிக் சென்டரில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து மருத்துவ சான்று பெற்று வர கூறி உள்ளனர்.

10 ஆயிரம் ரூபாய் கொடுக்க மறுத்த ஜான் ரெஜி, தனது உடலில் எந்த நோயுமில்லை என்று சோதனைகளுக்கான கட்டணமாக 4 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த மருத்துவ சான்றை சரி பார்த்த போது ஜான் ரெஜிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சான்றிதழில் ரெஜிக்கு டி.பி வியாதி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மருத்துவமனையில் கேட்ட போது 4 ஆயிரம் ரூபாய்க்கு இப்படி தான் மருத்துவ சான்று வழங்குவோம் என்று மிரட்டி அனுப்பி உள்ளனர். இதனால் அவரால் துபாய்க்கு வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சூர்யா டிராவல்ஸ் நிறுனத்தினரும் ரெஜியிடம் தாங்கள் பெற்ற பணத்தை திருப்பி தர மறுத்து மிரட்டி அனுப்பி உள்ளனர். தாயின் நகைகளை அடகு வைத்து கொடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்காத விரக்தியோடு டி.பி நோய் எப்படி வந்தது ? என்ற குழப்பத்துக்கு தள்ளப்பட்டார் ஜான் ரெஜி.

இதையடுத்து புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிலும், அரசு மருத்துவமனையிலும் முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட போது ரெஜிக்கு அவருக்கு உடலில் எந்த வித வியாதியும் இல்லை என்பது உறுதியானது. இரு மருத்துவமனைகளும் ரெஜி முழு உடல் தகுதியுடன் இருப்பதாக சான்றளித்துள்ளன. 10 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக தவறான மருத்துவ சான்று அளித்து தனது வெளி நாட்டு பயணம் தடுக்கப்பட்டதாகவும், பணம் கொடுத்தால் போலியான மருத்துவ சான்றுகளை வழங்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார் ரெஜி

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ரெஜி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ,டிராவல்ஸ், மற்றும் மருத்துவமனைக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் ரெஜியையும் அவரது தாயாரையும் மிரட்டி விரட்டி உள்ளனர். மருத்துவ சான்று மோசடி மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தின் பண மோசடி குறித்து காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டது. மீண்டும் மதுரவாயல் காவல் நிலையத்துகே புகார் அனுப்பி வைக்கப்பட்டதால் மதுரவாயல் காவல்துறையினர் ரெஜியை ஒருமையில் திட்டி மீண்டும் விரட்டி உள்ளனர்..!

மோசடியாக மருத்துவ சான்று கொடுப்பவர்களையும், பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களையும் பாதுகாக்கும் காவலர்கள் மீது உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார் ஜான் ரெஜி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!