Advertisement

சென்னையில் போலீஸ் வாகன டீசலைத் திருடிய காவலர் சிக்கினார்

சென்னை புதுப்பேட்டையில், காவல்துறை வாகனத்தில் இருந்து டீசலைத் திருடிய குதிரைப்படைக் காவலரைப் பிடித்து, உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்வர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் குதிரைப்படை வீரரராக பணியாற்றி வருகிறார். இவர், தன்னுடைய நண்பர் விஜயகாந்த் என்பவருடன் சேர்ந்து, முதியவர் ஒருவர் மூலமாக இரண்டு காளைகளைப் பராமரித்து வந்துள்ளார். காளைகளைத் தொடர்ந்து பராமரிக்க இயலாததால், அவற்றை திண்டுக்கல்லில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். காளைகளைத் திண்டுக்கல்லுக்கு ஏற்றிச்

செல்வதற்காக சதீஷ் என்ற வாகன ஓட்டுநரை அணுகிய இருவரும், 4 ஆயிரம் ரூபாய் பணமும், 60 லிட்டர் டீசலும் அவருக்குத் தருவதாக வாக்களித்துள்ளனர். இதையடுத்து, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை வாகன ஓட்டுநராக பணியாற்றும் வேதாஸ்ரீ என்பவரிடம், போலீஸ் வாகனத்திற்கான டீசலை ரமேஷ் குறைந்த விலைக்கு வாங்கி உள்ளார்.

லிட்டருக்கு 45 ரூபாய் கொடுத்து வாங்கிய 80 லிட்டர் டீசலை, சதீஷின் வாகனத்தில் ஏற்றும் போது அங்கிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது, போலீஸ் வாகனத்திற்கான டீசல் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, டீசல் திருட்டில் ஈடுபட்ட ஆயுதப்படைக் காவலர் ரமேஷையும், அதனைத் திருடி விற்ற ஓட்டுநர் வேதாஸ்ரீயையும் பிடித்து, ஆயுதப்படை தலைமையிட உதவி ஆணையர் கோபால் விசாரணை நடத்தி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன