சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வாங்க முயற்சி

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற முயன்றதாக இலங்கைத் தமிழர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த சஞ்சீவி, சபீக் மற்றும் 3 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் எடுக்க முயற்சிப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவர்களை கண்காணித்த போது, பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை போலியாக தயார் செய்து, இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் எடுக்க முயன்ற சஞ்சீவி, சபீக் அகமது, முகமது சலீம், குமார் மற்றும் பென்னட் சேவியர் ஆகியோரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன