Advertisement

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மற்றும் ஸ்ட்ரஹான்ஸ் சாலையில் உள்ள கே.எல்.பி. கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித்துறை இணை ஆணையர் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையானது 3 இடங்களிலும் இரவு விடிய விடிய தொடர்ந்து நடைபெற்றது.

கடந்த மாதம் சசிகலா, தினகரன் ஆகியோரின் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் போது கே.எல்.பி. கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.இந்த நிலையில் தற்போது 3 வது முறையாக இந்த நிறுவனங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன