சென்னையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னையிலும் திங்கட்கிழமை நடைபெற இருப்பதால், அதற்கென விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எம்எல்ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், எம்.பி.க்கள் வாக்களிக்க பச்சை நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்பட உள்ளது.

வாக்குச்சீட்டுகளும், வாக்குப்பெட்டிகளும் விமானத்தின் மூலம் டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்டு தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கான விதிமுறைகளை விளக்கி, தேர்தல் ஆணையத்தின் சார்பில் சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன