Advertisement

சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி 1 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மோசடி

சென்னையில், கப்பல்படை அதிகாரியின் தந்தை, ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் முன்னாள் ஓட்டுநரான தவமணி என்பவர், மணலி புதுநகர் 80 அடி பிரதான சாலையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் தங்கமணி, கப்பல்படையில் ஹவில்தாராக பணியாற்றுகிறார். இந்நிலையில், ஏலச்சீட்டும் நடத்தி வரும் தவமணி, கடந்த 5 மாதங்களாக முதிர்வு பணத்தை திருப்பித் தரவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். ஆனால், தவமணி தனக்கு எந்த சொத்துக்களும் இல்லை என்றும், நொடிப்பு நிலை அடைந்ததாகவும் கூறி, நீதிமன்றம் மூலம் மஞ்சள் நோட்டீஸ் அளித்துள்ளார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பணம் செலுத்தியவர்கள், ஞாயிறன்று தவமணியின் மளிகைக்கடை முன் திரண்டு பணத்தைக் கேட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மணலி புதுநகர் போலீசார், அவர்களை சமாதானப் படுத்தினர். மோசடி குற்றச்சாட்டை அடுத்து, பணத்தை சிறிது சிறிதாக திருப்பி செலுத்தி விடுவதாக தவமணி போலீசாரிடம் உறுதியளித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன