Advertisement

சென்னையில் உள்பக்கமாக பூட்டப்பட்ட வீட்டில் கழுத்தறுபட்ட பெண் பிணம்

சென்னை – தாம்பரம் அருகே உள்பக்கமாக பூட்டிய வீட்டுக்குள் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

பம்மல் – மூங்கில்ஏரியில் மளிகை கடை வைத்துள்ள ஹபீப்முகமது, முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். புதனன்று வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவரது மகள் பலமுறை கதவைத் தட்டியும், கதவு திறக்கப்படவில்லை.

சந்தேகத்தின்பேரில் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஹபீப் முகமதுவின் மனைவி சுலைகாபானு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். தகவலின்பேரில் வந்த சங்கர் நகர் போலீசார், சுலைகாபானுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உள்பக்கமாக பூட்டப்பட்ட வீட்டில் கழுத்து அறுபட்டு கிடந்தது கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன