சென்னையின் இரண்டாவது கலங்கரை விளக்கம் திறப்பு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், புனரமைக்கப்பட்ட மிகப் பழமையான இரண்டாவது கலங்கரை விளக்கத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்தார். கடந்த 1840 ஆம் ஆண்டு 60 ஆயிரம் ரூபாய் செலவில 161 அடியில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த இரண்டாவது கலங்கரை விளக்கம், 1844 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்பட்டு வந்தது.

50 ஆண்டுகளுக்குப் பின்னர் 1894ஆம் ஆண்டு இதன் செயல்பாடு நிறுத்தப்பட்டது. பின்னர், இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வந்தது.

நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து கிடந்த இந்தக் கலங்கரை விளக்கம், சென்னை உயர்நீதிமன்றத்தின் 125 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி புனரமைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை, உயர்நீதிமன்றத்தின் 125 ஆவது ஆண்டுவிழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!