Advertisement

செங்கோட்டை, புனலூர் ரயில் பாதை அகல பாதையாக மாற்றம்

செங்கோட்டை, புனலூர் இடையேயான அகல ரயில் பாதையில் இம்மாத இறுதியில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய ரயில் சேவையான செங்கோட்டை, புனலூர் இடையேயான, 50 கிலோமீட்டர் தூர மீட்டர் கேஜ் பாதையை, பிராட்கேஜ் எனப்படும் அகல ரயில்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக 358 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த 2010ஆம் ஆண்டு இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

112 ஆண்டுகள் பழமையான இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்தை தொடங்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, புது ஆரியங்காவு இடையே, 19 கிலோமீட்டர் தூர பாதையில், பாலங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. ஏற்கனவே 5 குகை பாதைகள் உள்ள இந்தப் பாதையில், தற்போது, ஆறாவதாக, 165 மீட்டர் நீளத்திற்கு, 70 கோடி ரூபாயில் ஒரு புதிய குகை பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தத் தடத்தில் இன்று அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் செங்கோட்டை, புனலூர் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன