செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர். கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் உள்ள சிக்னலில் நேற்றிரவு திடீரென கோளாறு ஏற்பட்டதை அடுத்து, தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்ற ரயில்களும், மின்சார ரயில்களும் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

இதனால் அவதிக்குள்ளான பயணிகள், கூடுவாஞ்சேரி ரயில் நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், உரிய பதில் கிடைக்காததால், ஆத்திரமடைந்த அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்குப் பின் சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!