Advertisement

சூடான் எல்லைப்பகுதி நிலத்தை தனது நாடாக அறிவித்த இந்தியர்

எகிப்து – சூடான் எல்லையில் யாரும் உரிமை கோராத பகுதியின் அரசனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட இந்தியர் ஒருவர், தனது தந்தை அந்த நாட்டின் பிரதமராக செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளார்.

எகிப்து – சூடான் எல்லையை ஒட்டி பிர்தாவில் (Bir Tawil) 2 ஆயிரத்து 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட நிலப் பகுதி உள்ளது. இந்த நிலப்பகுதியை எந்த நாடுமே உரிமை கொண்டாடாத நிலையில், அங்கு சென்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சுயாஷ் தீக்சித் என்பவர், பிர்தாவிலை ’கிங்டம் ஆஃப் தீக்சித் நாடு’ என அறிவித்துள்ளார். கிங்டம் ஆஃப் தீக்சித் நாட்டிற்கு தானே அரசன் என பிரகடனப்படுத்திக் கொண்ட அவர், தனது நாட்டுக்கு தேசியக்கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அந்த நாட்டின் பிரதமர் தனது தந்தை என்று அறிவித்துள்ள அவர், மற்ற பணிகளுக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். கிங்டன் ஆஃப் தீக்சித்தை தனது நாடாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ள சுயாஷ் தீக்சித், தனது நாட்டில் நிலம் வாங்குவோர், அங்கு முதலில் செடி நட வேண்டும் என்றும் சட்டம் இயற்றியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன