சுவற்றில் துளையிட்டு இறங்கி உதிரிபாக விற்பனைக் கடையில் கொள்ளை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சுவற்றில் துளையிட்டு இறங்கி, உதிரிபாக விற்பனைக் கடையில் புகுந்து திருடிய கொள்ளையனை, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே பாலாஜி என்பவருக்குச் சொந்தமான நம்பி அன் கோ என்ற உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. புதன்கிழமை இரவு கடைக்குள் நுழைந்த திருடன், முகத்தில் கைக்குட்டை கட்டியபடி க கல்லாபெட்டி மற்றும் கடையில் இருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இந்த காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொள்ளையனை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன