சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காத எரிபொருட்களில் இயங்கும் படகு

சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத பல்வேறு வகையான எரிபொருட்களில் இயங்கும் உலகின் முதல் படகு, 6 ஆண்டுகளுக்கான கடல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

பிரான்ஸ் கடல்பகுதியில் இருந்து சனிக்கிழமை பயணத்தைத் தொடங்கிய அந்தப் படகில், எரிசக்தியை பெறுவதற்காக சூரியமின்தகடுகள் பொறுத்தப்பட்டுள்ளன. சிறிய ரக காற்றாலை மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இரவு நேரத்தில் பயன்படுத்த ஹைட்ரஜன் Fuel cell பயன்படுத்தப்படுகிறது. முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத இந்த எரிபொருட்களைக் கொண்டு, அட்லான்டிக் வரையிலான கடல் பயணத்தில், 50 நாடுகளைக் கடந்து செல்ல இருப்பதாக அதன் கேப்டன் தெரிவித்துள்ளார்.

புவி வெப்ப மயமாதலுக்கு எதிராக துப்பாக்கி, தோட்டா கொண்டு போராட முடியாது என்றும், சுற்றுச் சூழலுக்கு தீங்கில்லாத எரிபொருள் பயன்பாட்டைக் கொண்டே தீர்வு காண முடியும் என வலியுறுத்தி பயணம் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன