Advertisement
Advertisement

சுகாதார பணிகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

தேனியில் சுகாதார பணிகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்துடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர் பாதியிலேயே திரும்பிச் சென்றனர். பெரியகுளத்தை அடுத்த கீழவடகரை பகுதியில் தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்தை வழிமறித்த அப்பகுதி பெண்கள் தங்கள் பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பால் மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் தனது காருக்கே திரும்பிச் சென்றார்.

இதுவரை தங்கள் பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், சுகாதரப்பணிகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்யததால், பணிகளை பார்வையிடாமல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாரிகள் திரும்பிசென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன