Advertisement

சீர்காழி அருகே முகத்துவாரங்கள் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த தொகுப்பு வீடுகள் புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சீர்காழி அருகே கடலோர கிராமங்களான பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு பகுதிகளில் உள்ள முகத்துவாரங்கள் தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஆட்சியர் சுரேஷ்குமார், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். சேதமடைந்த தொகுப்பு வீடுகளின் விவரங்கள் அரசிடம் சமர்பிக்கப்பட்டு, விரைவில் புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன