சீன அரசின் மூத்த அதிகாரி சாங் டாவ் தூதராக வடகொரியா பயணம்

சீன அரசின் மூத்த அதிகாரியான சாங் டாவ் (Song Tao) என்பவர் அதிபர் ஜின் பிங்கின் தூதராக வடகொரியாவுக்கு செல்கிறார். வடகொரியா தனது பிரச்சினைகளுக்கு தூதரக ரீதியாக தீர்வு காண சீனா ஏற்கனவே வலியுறுத்தியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் சீனா சென்ற போது வடகொரிய விவாகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகாரத்துறைத் தலைவர் சாங் டாவ், சீன அதிபரின் தூதராக வரும் வெள்ளிக்கிழமை வடகொரியா செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன