சீன அதிபர் ஸீ ஜின்பிங், அமெரிக்க அமைச்சருடன் சந்திப்பு

வடகொரியா புதிய வகை ஏவுகணை எஞ்சின் சோதனை மேற்கொண்ட அதே நேரத்தில், சீன அதிபர் ஸீ ஜின்பிங், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டில்லர்ஸன் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. தென்கொரியாவுக்கு ஆதரவளித்து வரும் அமெரிக்காவிடம் போர் முனைப்புடன் செயல்படும் வடகொரியா, அவ்வப்போது அணு அயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை உள்ளிட்ட பல சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வடகொரியாவின் வர்த்தகத் தோழமை நாடாகக் கருதப்படும் சீனாவிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டில்லர்ஸன் தமது முதல் ஆசிய பயணத்தின் இறுதி நாளன்று சென்றிருந்தார். பெய்ஜிங்கில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை சந்திக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக வடகொரியா மிக அதிக உந்துதல் திறன் கொண்ட புதிய ஏவுகணை எஞ்சின் சோதனையை நடத்தியது. இந்நிலையில் சந்திப்பின்போது, இருநாட்டு நல்லுறவுக்கு ஒத்துழைப்பு தருமாறு சீனா அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டது. இதனிடையே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் செயல்பாடு மிக மோசம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன