Advertisement
Advertisement

சீனாவில் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்ட பாண்டா கரடிகள்

சீனாவில் 2 பாண்டா கரடிகள் ஒரே நேரத்தில் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன. யிங்ஜியூ, பாக்ஸி என்று பெயரிடப்பட்ட இந்த ஆண், பெண் பாண்டாக்கள் இரண்டும், சிச்சுவான் மாகாணத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. அப்போது, வனத்தில் குடிநீர், உணவு தேடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, லிஜிபிங் ((Liziping)) என்ற இடத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு பாண்டாக்களைக் கொண்டு வந்த அதிகாரிகள், காட்டுப்பகுதிக்குள் செல்லும் வகையில் விடுவித்தனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன