Advertisement

சீனாவில் இருந்து பின்லாந்துக்கு கடனாக வழங்கப்பட்ட பாண்டா கரடி ஜோடி

சீனாவில் இருந்து இரண்டு பாண்டா கரடிகள் கொண்டுவரப்பட்டதை, பின்லாந்தில் உள்ள பத்திரிகைகள் அதை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. தொலைக்காட்சிகளிலும் பாண்டா கரடிகள் விமானம் மூலம் கொண்டு செல்வதற்காக தயாரான காட்சிகள் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

தங்கள் குழந்தைகளுடன் பாண்டாக்களை பார்க்கப் போவதாக பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் தெரிவித்தனர். இந்த பாண்டா கரடிகளின் ஜோடி அங்குள்ள அஹதாரி பூங்காவில் வைக்கப்படும். அவற்றுக்கான புதிய வீடு அங்கு தயாராகி வருகிறது. அங்கு அவற்றுக்கு ஜின்பாவோ ,ஹூ பாவோ என்ற சீனப்பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளூர் பெயர்கள் வைக்கப்பட உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன