சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையில் குழு

சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் ஏழு ஏ.டி.எஸ்.பிக்கள், 10 டி.எஸ்.பிக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ரயில்வே காவல்துறை ஐ.ஜி.யாக உள்ள பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, அவருக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

நிலுவையில் உள்ள சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அசோக் குமார், பாலசுப்ரமணியன், இளங்கோ, லோகநாதன், ரவி, குமார், ஜோஸ் தங்கையா, ஆகிய 7 ஏ.டி.எஸ்.பி.க்களும், வெங்கடராமன், அசோக் நடராஜன், ரமேஷ், கருணாகரன், விஜயகார்த்திக் ராஜ், ரவிச்சந்திரன், ரகுபதி, கனகராஜ், சிவசங்கர், ரமேஷ் பாபு ஆகிய 10 டி.எஸ்.பி.க்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு 18ஆம் தேதி முதல் விசாரணையை தொடங்கும் என்றும் காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *