சிறையிலிருந்து தப்பிக்க தீ வைத்த சிறைக் கைதிகள்

அமெரிக்காவில் சிறைக்கைதிகளின் தப்பிக்கும் முயற்சியின் போது சிறைப் பணியாளர்கள் இருவர் தீயில் கருகி பலியாகினர். வடக்கு கரோலினா மாகாணத்தில், அந்நாட்டு நேரப்படி வியாழனன்று பிற்பகல் 3 மணியளவில் சிறை வளாகத்தில் உள்ள துணி தைக்கும் தொழிற்சாலையில் சிறைக்கைதிகள் சிலர் தீ வைத்தனர்.

அப்போது நிலவும் பரபரப்பான சூழலை சாதகமாக்கி சிறையில் இருந்து தப்பிக்க கைதிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், தீயை அணைக்கச் சென்ற சிறைப் பணியாளர்கள் இருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

10 சிறைக்கைதிகள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகள் தப்பும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன