Advertisement

சிங்கப்பூரில் வளர்ந்து வரும் UBER

சிங்கப்பூரில் ubercab தொழில் வளர்ச்சி அடைவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ளூரில் இயங்கி வந்த டாக்சிகளுக்கு uber cab எதிரியாக விளங்கும் எனும் மனநிலை முன்பு இருந்தது எனவும் தற்போது அந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் uber நம்பிக்கை தெரிவித்துள்ளது.

uber நிறுவனம் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக சிங்கப்பூரில் உள்ள ComfortDelGro எனும் உள்ளூர் cab operator உடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

மலேசியா, மியான்மர் ஆகிய நாடுகளிலும் uber இத்தகைய ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. சிங்கப்பூர் மலேசியா மியான்மர் ஆகிய நாடுகளில் தற்போது uber செயலி பிரபலமடைந்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன