சிகரெட் மீதான செஸ் வரி மேலும் அதிகரிப்பு

சிகரெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பு, நள்ளிரவு முதல் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. சிகரெட்டுகளுக்கு உச்ச வரம்பான 28 சதவீத வரியும், தீர்வை வரியாக 5 சதவீதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதுதவிர 1,000 சிகரெட்டுகளுக்கு குறிப்பிட்ட தொகை வீதம் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு வரியும் கூடுதலாக விதிக்கப்பட்டது.

சிகரெட் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு வரிகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை விட அவை குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம், சிகரெட் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.

இந்த முரண்பாட்டைக் களையும் நோக்கில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சிகரெட்டுகள் மீதான நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1,000 சிகரெட்டுகளுக்கு தற்போது விதிக்கப்பட்ட வரியுடன் சேர்த்து, மேலும் 792 ரூபாய் வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் விலை உயராது என்று கூறப்பட்ட போதிலும், உற்பத்தியாளர்கள் நுகர்வோரிடம்தான் அதனை வசூலிப்பார்கள் என்பதால் விரைவில் சிகரெட்டுகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!