சாரணர், சாரணியர் இயக்க தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வி

சென்னையில் நடைபெற்ற சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட ஹெச் ராஜா 52 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.

தமிழக சாரணர் சாரணியர் இயக்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை காமராஜர் சாலையிலுள்ள மாநில தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.20 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா, 52 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணி 232 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

துணைத்தலைவர் பதவிக்கு லெட்சுமி, கஸ்தூரி, மஞ்சுளா ஆகிய 3 பெண்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாக்குப்பதிவின் போது தேர்தலை நிறுத்துவதற்கான தடை ஆணையுடன் கே.எல்.ரமேஷ் என்பவர் அணுகிய நிலையில், தடையாணை எதுவும் தனக்கு வரவில்லை என தேர்தல் அலுவலர் கூறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!