சான்பிரான்சிஸ்கோ விமானங்கள் விபத்தில் தப்பியது குறித்து புதிய தகவல்

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் விபத்தில் தப்பியது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

டாக்ஸி வே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த முதல் விமானம் புறப்படுவதற்கு வெறும் 29 அடி தூரமே இருந்த நிலையில் அந்த விமானம் மீது ஏர் கனடா விமானம் மோத இருந்தது தெரியவந்துள்ளது. கடைசி ஒரு விநாடியில் கொடுக்கப்பட்ட உத்தரவினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ஏரோ கன்சல்டிங் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி ரோஸ் எய்மர் தெரிவித்துள்ளார்.

முதல் விமானத்துக்கும் 2 வது விமானத்துக்கும் இடையே 100 அடி தூரம் மட்டும் இருந்ததால் சிறு விபத்து ஏற்பட்டிருந்தாலும் குறைந்த பட்சம் 3 விமானங்களும் பேரழிவைச் சந்தித்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன