Advertisement

சவூதியில் கால்பந்து போட்டியை நேரில் காண பெண்களுக்கு அனுமதி

சவூதி அரேபியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியை நேரில் கண்டுகளிக்க பெண்களுக்கு முதல்முறையாக அனுமதி அளிக்கப்பட்டது. ஜித்தா (( jeddah)) நகரில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை காண சவூதி பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், அவர்கள் அமர்வதற்கு தனிக் கேலரிகளும் அமைக்கப்பட்டன.

முதல் முறையாக மைதானத்திற்கு வந்த சவூதி பெண்கள் கால்பந்து போட்டியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். சவூதியில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கும் தியேட்டர்கள் திறப்பதற்கும் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன