சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சயீத் அஜ்மல்

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளாரான சயீத் அஜ்மல், சர்வதேச போட்டிகள் அனைத்திலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கராச்சியில் நடந்த ஒருநாள் போட்டியில் அஜ்மல் அறிமுகமானார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சயீத் அஜ்மல், பந்தை எரிவதாக சர்ச்சையில் சிக்கினார்.

சில மாதங்கள் தடைக்குப் பின்னர் மீண்டும் அவர் அணிக்கு திரும்பினாலும் அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் 20 ஓவர் போட்டித் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், 113 ஒரு நாள் போடிகளில் 185 விக்கெட்டுகளையும் சயீத் அஜ்மல் கைப்பற்றியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன