Advertisement

சமயபுரத்தில் இறங்க வேண்டிய பயணியை பெரம்பலூரில் இறக்கிவிட்ட நடத்துனர் – திரும்பிச் செல்ல பணமின்றிப் பரிதவித்த பயணி

திருச்சியில் அரசுப் பேருந்தில் ஏறிய பயணி ஒருவர், 35 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இறக்கிவிடப்பட்டதால், திரும்பிச் செல்ல பணமின்றிப் பரிதவிப்புக்கு ஆளானார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர், சமயபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகனை பார்ப்பதற்காக திருச்சியில் இருந்து கடலூருக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால், அவர் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கிவிடாமல், 35 கிலோ மீட்டர் தூரம் தாண்டி பெரம்பலூரில்தான் பேருந்தை நிறுத்தியுள்ளனர்.

இதுபற்றிக் கேட்டதற்கு, நடத்துநர் தகாத வார்த்தையால் தன்னைத் திட்டியதாகவும், கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் வேதனையுடன் தெரிவித்தார்.

திரும்பிச் செல்லப் பணம் இன்றித் தவித்த முருகனுக்கு பேருந்துநிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் பணஉதவி செய்து அனுப்பிவைத்தனர். வழக்கமாக அந்தப் பேருந்து சமயபுரம், பாடாலூர் ஆகிய இடங்களில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லும் என்றும், அவ்வாறு நிறுத்தாதது ஏன் என்று சக பயணிகள் கேள்வி எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன