சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை, அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை, அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளதுசபரிமலை ஐயப்பன் கோவிலில் பூப்பெய்திய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அதேசமயம் மாத விலக்கு நின்றுபோன பெண்கள் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்கபடுகிறார்கள். அந்த வகையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இது பெண்களுக்கு எதிரான பாரபட்சம் என்றும், அனைத்து பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது வழக்கு.

கோவிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய முறையே தொடர வேண்டும் என 1991ஆம் ஆண்டில் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியதோடு, பாரபட்சம் காட்டுவதை அரசமைப்புச் சட்டம் அனுமதிப்பதில்லை என கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்கலாமா என்பதை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன