சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது.தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பகல் பதினொன்றரை மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடை பெறும். உச்ச பூஜைக்கு பிறகு பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு திறக்கப்படும்.

தொடர்ந்து இரவு 11 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்ற பிறகு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். வருகிற 26-ந்தேதி பிரசித்திபெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன