சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் சேகர் ரெட்டி மீண்டும் கைது

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள தொழில் அதிபர் சேகர் ரெட்டியை அமலாகத்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 136 கோடி ரொக்கம், 179 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, அவரது கூட்டளி சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேரிடம் நேற்று காலை 11 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். இரவு 10 மணி வரை நடைபெற்ற விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள நீதிபதி கோபிநாத் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 28ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவச் சான்று பெறப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன